×

மூதாட்டியிடம் தாலி செயின் பறிப்பு

 

சின்னசேலம், மே 29: மூதாட்டியிடம் பைக்கில் வந்த மர்ம நபர்கள் தாலி செயினை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் அருகே கரடிசித்தூர் காட்டுகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் மனைவி லட்சுமி(65). இவர் நேற்று அதிகாலை வீட்டில் இருந்து மாதவச்சேரி சாலை வந்துள்ளார். அப்போது அடையாளம் தெரிந்த, பெயர் தெரியாத இரண்டு மர்ம நபர்கள் பைக்கில் வந்து மூதாட்டி அணிந்திருந்த 3 பவுன் தாலி செயினை பறித்துக் கொண்டு தப்பினர். செயினை கெட்டியாக பிடித்து கொண்டதால், பாதி செயின் லட்சுமியிடம் இருந்தது.

அப்போது லட்சுமிக்கும், மர்ம நபர்களுக்கும் இடையே நடந்த போராட்டத்தில் லட்சுமி மயங்கி விழுந்து விட்டார். இந்நிலையில் அருகில் உள்ள வீட்டை சேர்ந்த மாசிமலை(70) என்பவர் அவரை பார்த்து அவருக்கு முதலுதவி செய்தார். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து லட்சுமி அளித்த புகாரின்பேரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து செயின் பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

The post மூதாட்டியிடம் தாலி செயின் பறிப்பு appeared first on Dinakaran.

Tags : Chinnasalem ,Kannan ,Lakshmi ,Karadisittur Kattukottai ,Kachirayapalayam ,Kallakurichi district ,
× RELATED மனைவியை கொன்று புதைத்து கணவன் தூக்கிட்டு தற்கொலை