×

2 இளம்பெண்கள் திடீர் மாயம்

சின்னசேலம், மே 30: சின்னசேலம் அருகே உலகியநல்லூர் முருகன் கோயில் தெருவை சேர்ந்தவர் சேகர்(56). விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். இவருடைய மகள் ஜெயலட்சுமி(20). திருமணமாகாதவர். மேலும் இவர் வெளிமாவட்டத்தில் உள்ள நூல் மில்லில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் ஜெயலட்சுமி தனது பாட்டியை காதுவலிக்கு சிகிச்சைக்காக சின்னசேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். சிகிச்சை முடிந்த நிலையில் சின்னசேலம் பஸ்நிலையத்தில் பேருந்திற்காக காத்திருந்தனர். அப்போது ஜெயலட்சுமி மாயமானார். இதுகுறித்து சேகர் கொடுத்த புகாரின்பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

கச்சிராயபாளையம் அருகே மாத்தூர் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் மணிவேல்(29). இவர் உஷா(22) என்ற பெண்னை காதலித்து இருவீட்டாருக்கும் தெரியாமல் திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில் உஷா கடந்த 23ந்தேதி தாய் வீட்டிற்கு செல்வதாக கூறிச்சென்றவர் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மணிவேல் கொடுத்த புகாரின்பேரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post 2 இளம்பெண்கள் திடீர் மாயம் appeared first on Dinakaran.

Tags : Chinnasalem ,Shekhar ,Murugan Koil Street ,Ulagiyanallur ,Jayalakshmi ,
× RELATED மனைவியை கொன்று புதைத்து கணவன் தூக்கிட்டு தற்கொலை