×

மேலும் இது போன்று சட்டத்திற்கு புறம் வம்பாகீரப்பாளையத்தில் ஜிம் மாஸ்டரை கல்லால் அடித்து கொலை செய்தது ஏன்? கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம்

புதுச்சேரி, ஜூன் 1: புதுச்சேரி வம்பாகீரப்பாளையத்தில் ஜிம் மாஸ்டர் விக்கியை கல்லால் அடித்து கொலை செய்தது ஏன்? என்பது தொடர்பாக கைதானவர்கள், போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் பகுதியை சேர்ந்த ஜிம் மாஸ்டர் விக்கி (எ) மணிகண்டன் என்பவரை கடந்த 29ம்தேதி 4 பேர் கொண்ட கும்பல் கல்லால் அடித்து கொலை செய்தனர். இச்சம்பவம் குறித்து ஒதியஞ்சாலை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிந்து, தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடினர்.

இக்கொலையில் ஈடுபட்ட அப்பகுதியை சேர்ந்த அசோக், கார்த்தி, காந்த் மற்றும் ஒரு சிறுவன் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்து, ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். இதனிடையில் கொலை சம்பவத்தை கண்டித்து அப்பகுதி மக்கள் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட 4 பேரின் வீடுகள் உள்பட 10க்கும் மேற்பட்ட வீடுகளை சூறையாடினர். கைதான நான்கு பேர் மீது குண்டாஸ் நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்களிடம் துணை மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் ராமகிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தி, குற்றவாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், கடந்த 29ம் தேதி வம்பாகீரப்பாளையம் விக்கியின் உறவினரான சாமிநாதனின் இறுதி ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தின்போது விக்கி கலந்து கொண்டார். அப்போது வம்பாகீரப்பாளையம் பகுதியை சேர்ந்த அசோக், விக்கியை அழைத்து இந்திரா காந்தி விளையாட்டு மைதானம் பின்புறத்தில் அமர்ந்து மதுஅருந்தி உள்ளனர். அப்போது கார்த்தி, ஸ்ரீகாந்த் மற்றும் சிறுவன் அங்கு வந்தனர். இதில் 2 பாட்டில் மதுவிற்கே விக்கிக்கு போதை ஏறி விட்டது. அப்போது அசோக்கு நாங்கள் 5 பாட்டில் குடிப்போம் என்று கூறினார். இதில் ஒருவர் விக்கியை தகாத வார்த்தையால் திட்டினார்.

இதில் ஆத்திரமடைந்த விக்கி, கையால் எங்களை தாக்கினார். இதில் வலி தாங்க முடியாமல், அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட கார் சக்கரத்தில் முட்டுக்கொடுக்க வைத்திருந்த கல்லை எடுத்து, விக்கியின் தலையில் பலமாக தாக்கியதில் அவர் மயங்கி கீழே விழுந்தார். இதை தடுக்க வந்தவரையும் தாக்கினோம். சத்தம் கேட்டு இறுதி ஊர்வலத்தில் வந்தவர்கள், ஓடி வருவதை பார்த்ததும், நாங்கள் அங்கிருந்து தப்பி ஒடியதாக கூறினர். இதையடுத்து ஒதியன்சாலை போலீசார் அசோக், கார்த்தி, காந்த் மற்றும் சிறுவன் ஆகிய நான்கு பேர் மீதும் வழக்குப்பதிந்து, நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

இறுதி ஊர்வலத்தில் போலீசார் குவிப்பு
ஜிம் மாஸ்டர் விக்கி ெகாலை வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதில் அசோக் என்பவர் மீது ஏற்கனவே 2 கொலை வழக்குகளும், கார்த்திகேயன் மற்றும் காந்த் மீது அடிதடி வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். நேற்று முன்தினம் மதியம் விக்கியின் உடல் கதிர்காமம் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடலை ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துவந்தபோது வழுதாவூர் சாலையிலிருந்து விக்கியின் வீடு வரை ஏராளமானோர் சாலை விதிகளைமீறி, வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் பைக்கில் சென்றனர். தொடர்ந்து நேற்று சன்னியாசிகுப்பம் இடுகாட்டில் விக்கியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். தொடர்ந்து 3வது நாளாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.பாக வீட்டை பூட்டக் கூடாது என்று நிதி நிறுவன மேலாளரை எச்சரித்து அனுப்பினர்.

The post மேலும் இது போன்று சட்டத்திற்கு புறம் வம்பாகீரப்பாளையத்தில் ஜிம் மாஸ்டரை கல்லால் அடித்து கொலை செய்தது ஏன்? கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம் appeared first on Dinakaran.

Tags : Vambakeerapalayam ,Puducherry ,Vicky ,Vicky (A) Manikandan ,Vambakeerpalayam ,Dinakaran ,
× RELATED புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் பகுதியை...