×

பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு

 

தேவகோட்டை, செப்.24: தேவகோட்டை ரெங்கநாதப்பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிக் கிழமையை முன்னிட்டு மூலவருக்கு திருப்பதி திருவேங்கடமுடையான் அலங்காரமும் உற்சவருக்கு கள்ளழகர் திருக்கோள அலங்காரமும் செய்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அர்ச்சனை செய்து சாமி கும்பிட்டு வழிபட்டனர்.

தேவகோட்டை வெள்ளையன் ஊரணி மேல்கரையில் கோதண்ட ராமர் கோயிலில் அமைந்துள்ளது. இக்கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு மூலவர் மற்றும் உற்சவமூர்த்திக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள்,பொதுமக்கள் அர்ச்சனை செய்து சாமி கும்பிட்டு வழிபட்டனர். ஆஞ்சநேயர் தங்க கவசத்தில் காட்சியளித்தார்.

The post பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Perumal temple ,Devakottai ,Tirupati Thiruvenkatamudayan ,Moolah ,Puratasi ,Devakottai Renganathaperumal temple ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை