×

தென்மேற்கு பருவமழை நாளை முதல் படிப்படியாக விலக ெதாடங்கும்: அக்.3வது வாரத்திற்கு பிறகு வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு

சென்னை: இந்தியாவில் தென்மேற்கு பருவமழை நடப்பாண்டில் இதுவரை 780.3 மிமீ மழை பெய்துள்ளது. சராசரியாக 832.4 மிமீ மழை பெய்துள்ளது. நீண்ட கால சராசரியில் 94% முதல் 106% வரை மழைப்பொழிவு இயல்பானதாக கருதப்படுகிறது. பொதுவாக, இந்த பருவமழை காலத்தில் (ஜூன் முதல் செப்டம்பர் வரை) நாடு சராசரியாக 870 மிமீ மழையைப் பெறும். இந்நிலையில், இந்தியாவில் நாளை(25ம் தேதி) முதல் தென்மேற்கு பருவ மழை விலகத் தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வழக்கமாக தென்மேற்கு பருவமழை செப்டம்பர் 17ம் தேதி விலக தொடங்கி அக்டோபர் 15க்குள் முழுமையாக விலகும். இந்த நிலையில் இந்த ஆண்டு 8 நாள் தாமதமாக தென்மேற்கு பருவமழை விலக தொடங்குகிறது. மேற்கு ராஜஸ்தான் பகுதியிலிருந்து செப்டம்பர் 25ம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை விலகத் தொடங்கும். இது படிப்படியாக இந்தியாவின் மற்ற பகுதிகளில் இருந்தும் தென்மேற்கு பருவமழை விலகும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 3வது வாரத்திற்கு பிறகு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை ஆண்டு மழைப்பொழிவில் 50-60 % மழையை வடகிழக்கு பருவமழை காலத்தில் தான் பெறுகிறது.

வடகிழக்கு பருவமழை சராசரியாக அக்டோபர் 20ம் தேதி தொடங்கும். அக்டோபர் 20ம் தேதியிலிருந்து ஒரு வாரத்திற்கு முன்போ அல்லது ஒரு வாரத்திற்கு பின்போ மழை தொடங்கினால், வடகிழக்கு பருவமழை இயல்பான வழக்கமான நேரத்தில் தொடங்கியதாக கருதப்படும். அதே நேரத்தில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்க்கொள்ள முன்எச்சரிக்கை நடவடிக்கையை தமிழக அரசு விரைவுப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post தென்மேற்கு பருவமழை நாளை முதல் படிப்படியாக விலக ெதாடங்கும்: அக்.3வது வாரத்திற்கு பிறகு வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Northeast ,CHENNAI ,India ,South West ,North East ,Dinakaran ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...