
பெரம்பலூர்,செப்.23: பெரம்பலூர் மாவட்டத்தில், வழக்கறிஞர்கள் தொடர் நீதிமன்ற பணி புறக்கணிப்பால் அன்றாட நீதிமன்றப்பணிகள் பாதிக்கப்பட்டது. பெரம்பலூர் பார் அசோசியேஷன் அவசர ஆலோசனை கூட்டத்தின் முடிவின்படி அதன் தலைவர் வள்ளுவன் நம்பி தலைமையில் நேற்றுமுன்தினம் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணி புறக் கணிப்பில் ஈடுபட்டனர். நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் அனைத்து மனுக்களும், வழக்கு ஆவணங்களும் ஆன்லைனில் இ-பைலிங் தாக்கல் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இது உடனடியாக செயல்பாட்டுக்கு வருவது மிக கடினமாக இருக்கிறது.
அதனால் வழக்கறிஞர்களின் நலன் கருதியும், நீதிமன்ற பணிகள் பாதிக்காமல் இருப்பதற்காகவும் இ-பைலிங் முறையை தற்காலிகமாக நிறுத்தி வைத்திட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தும், இதற்கு கால அவகாசம் அவகாசம் கேட்டும் செப்டம்பர் 7ம் தேதி முதல் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இ-பைலிங் தாக்கல் முறையை தற்காலிகமாக நிறுத்தும்வரை, பெரம்பலூர் பார் அசோசியேஷனை சேர்ந்த வழக்கறிஞர்கள் தொடர் கால வரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர். தொடர் நீதிமன்ற பணி புறக்கணிப்பில் வழக்கறிஞர்கள் ஈடுபட்டதால் நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
The post பெரம்பலூர் மாவட்டத்தில் வழக்கறிஞர்கள் தொடர் நீதிமன்ற பணி புறக்கணிப்பு appeared first on Dinakaran.