சென்னை: கொலை வழக்கில் 29 ஆண்டுகளாக புழல் சிறையில் உள்ள தண்டனை கைதிக்கு 40 நாட்கள் விடுப்பு வழங்கி ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. கைதியும் அவரது அடிப்படை உரிமைகளும் சிறைக் கதவுகளில் இருந்து பிரிந்து விடுவதில்லை என்று ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. செல்வம் என்ற கைதி, குழந்தைகள் படிப்புக்கு ஏற்பாடு செய்யவும், வீட்டை பழுது பார்க்கவும் 40 நாள் விடுப்பு கோரி விண்ணப்பம் செய்திருந்தார். தன்னுடைய விடுப்பு விண்ணப்பம் குறித்து சிறைத்துறை எந்த முடிவும் எடுக்காததால் ஐகோர்ட்டில் கைதி செல்வம் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
The post கொலை வழக்கில் 29 ஆண்டுகளாக புழல் சிறையில் உள்ள தண்டனை கைதிக்கு 40 நாட்கள் விடுப்பு வழங்கி ஐகோர்ட் ஆணை..!! appeared first on Dinakaran.
