சிவகங்கை: புரட்டாசி மாதம் பிறப்பையொட்டி திருப்புவனம் சந்தையில் ஆடுகள் விலை சரிந்துள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வாரச்சந்தையில் வாரந்தோறும் செவ்வாய் கிழமை விவசாயிகள் அதிகளவில் ஆடுகள் விற்பனைக்காக கொண்டுவருவது வழக்கம். இந்த வாரமும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தன. ஆனால், போதிய விலை இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
10 கிலோ எடை கொண்ட ஒரு ஆடு ரூ.10,000-க்கு விற்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ரூ.8000-ஆக குறைந்துள்ளது. புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடுவதை சிலர் தவிர்ப்பதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. மேலும், மழைக்காலத்தில் ஆடுகளை வளர்ப்பது சிரமம் என்பதாலும் சந்தையில் ஆடுகளை வாங்க பலரும் முன்வரவில்லை என்றும் தெரிகிறது. அதே சமயம் கோழியை வியாபாரிகள் போட்டிபோட்டு வாங்கி சென்றனர். ஒரு கிலோ எடை கொண்ட ஒரு கோழி ரூ.350-லிருந்து ரூ.450-ஆக உயர்ந்துள்ளது.
The post புரட்டாசி மாதத்தால் ஆடுகள் விற்பனை சரிவு: 10 கிலோ எடை கொண்ட ஆடு விலை ரூ.8000-ஆக குறைந்து விற்பனை appeared first on Dinakaran.
