×

தமிழ்நாடு அரசு சமீபத்தில் 3 பெண்களை அர்ச்சகர்களாக நியமித்தது வரவேற்கத்தக்கது: டி.டி.வி.தினகரன் பேட்டி

கும்பகோணம்: நம் மாநிலத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டிய தமிழ்த்தாயின் தலைமகன், அறிவுலக ஆசான் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் பிறந்தநாளான இன்று, கும்பகோணம் சுவாமி மலையில் அன்னாரது திருவுருவ படத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக டி.டி.வி.தினகரன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பிறகு செய்தியாளர்களிடம் பேசியவர்;

பெண்கள் அர்ச்சகர்களாக நியமனம்: டிடிவி தினகரன்

தமிழ்நாடு அரசு சமீபத்தில் 3 பெண்களை அர்ச்சகர்களாக நியமித்தது வரவேற்கத்தக்கது என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் நிலைப்பாடு பணம், பதவி மட்டுமே: டிடிவி தினகரன்

அதிமுகவின் நிலைப்பாடு பணம் மற்றும் பதவி மட்டுமே என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் நிலைப்பாடு சனாதனமா? சமூகநீதியா? என்ற கேள்விக்கு டி.டி.வி.தினகரன் விமர்சனம் செய்துள்ளார். அதிமுகவின் தற்போதைய ஒரே பலம் இரட்டை இலை சின்னம்; இரட்டை இலை சின்னத்தை மீட்போம். கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

The post தமிழ்நாடு அரசு சமீபத்தில் 3 பெண்களை அர்ச்சகர்களாக நியமித்தது வரவேற்கத்தக்கது: டி.டி.வி.தினகரன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government ,DTV Dinakaran ,Kumbakonam ,Tamil Nadu ,Perunthakai Anna ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...