×

மெட்ரோவுக்கு இணையான வசதிகளுடன் கடற்கரை- வேளச்சேரி ரயில் சேவை மேம்படுத்த அரசு திட்டம்: ஆலோசகரை நியமிக்க டெண்டர் வெளியீடு

சென்னை: சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதிலும், மக்கள் சிரம்மின்றி பயணம் செய்வதிலும் ரயில்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி இடையே மயிலாப்பூர், மந்தைவெளி, பசுமைவழிச் சாலை, கோட்டூர்புரம் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிளும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகம் உள்ள திருவான்மியூர், தரமணி, பெருங்குடி உள்ளிட்ட இடங்களை இணைக்கிறது. சென்னை கடற்கரை- வேளச்சேரி பறக்கும் ரயில் சேவையை கையகப்படுத்தி தமிழக அரசு மூலம் இந்த ரயில் சேவையை இயக்க திட்டமிட்டுள்ளது.

இதற்காக வணிக திட்ட அறிக்கையை தயார் செய்ய ஆலோசகரை நியமிக்க சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் (கும்டா) டெண்டர் வெளியிட்டுள்ளது. இந்த ரயில் நிலையங்களில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் சரியாக இல்லை என்றும், ரயில் நிலையங்கள் சுகாதாரமில்லாமல் இருப்பதாகவும் பயணிகள் குற்றச்சாட்டு வைக்கின்றனர், இந்த ரயில் சேவையை தமிழக அரசு எடுத்துக் கொண்டு மெட்ரோ ரயில் நிலையங்கள் போல் மாற்ற திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் அதிகாரிகள் கூறியதாவது: சென்னை கடற்கரை- வேளச்சேரி பறக்கும் ரயில் சேவையில் ரயில் இயக்கம் முதல் பார்க்கிங் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் கையகப்படுத்தி மேம்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான வணிக திட்ட அறிக்கை தயார் செய்வது தொடர்பான நிறுவனத்தை தேர்வு செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதன் மூலம் பறக்கும் ரயில் நிலையங்களை மறுசீரமைப்பு செய்து மெட்ரோ ரயில் நிலையம் போல் மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post மெட்ரோவுக்கு இணையான வசதிகளுடன் கடற்கரை- வேளச்சேரி ரயில் சேவை மேம்படுத்த அரசு திட்டம்: ஆலோசகரை நியமிக்க டெண்டர் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Velacheri ,Chennai ,Chennai Beach ,Dinakaran ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...