×

அமைந்தகரையில் லாரி கவிழ்ந்து விபத்து

அண்ணாநகர்: செங்குன்றத்தில் இருந்து நேற்று முன்தினம் அதிகாலை 1.30 மணிக்கு சிமென்ட் கலவை லாரி ஒன்று, நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவன கட்டுமான பணிக்காக புறப்பட்டது. இந்த லாரி, அமைந்தகரை ஸ்கை வாக் மேம்பாலத்தில் சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது. இதில், டிரைவர் சிறிய காயத்துடன் அதிர்ஷடவசமாக உயிர் தப்பினார். தகவலறிந்த அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து, சாலையில் கவிழ்ந்த லாரியை கிரேன் மூலம் மீட்டு போக்குவரத்தை சீர்படுத்தினர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து, லாரி டிரைவர் வியாசர்பாடியை சேர்ந்த அசோக் குமாரிடம் (42) விசாரித்து வருகின்றனர்.

The post அமைந்தகரையில் லாரி கவிழ்ந்து விபத்து appeared first on Dinakaran.

Tags : Annanagar ,Senggunram ,Nungambakkam ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...