×

மக்கள் குறைதீர் முகாமில் 87 மனுக்களுக்கு உடனடி தீர்வு

தர்மபுரி, செப்.14: தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில், பொதுமக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நேற்று நடந்தது. இதில் 87 புகார் மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது. தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில், பொதுமக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம், மாவட்ட எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில் நேற்று நடந்தது. ஏடிஎஸ்பி இளங்கோவன் முன்னிலை வகித்தார். முகாமில் மாவட்டம் முழுவதும் 31 காவல் நிலையங்களில் இருந்து தனித்தனியாக புகார் மனுதாரர்கள் நேரில் வரவழைத்து, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நிலத்தகராறு, சொத்து தகராறு, அடிதடி, பொது வழி பிரச்னை, குடும்பத் தகராறு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மொத்தம் 118 புகார் மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில், 87 மனுக்கள் மீது விசாரணை முடித்து உடனடி தீர்வு காணப்பட்டது. இம்முகாமில் இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள் மற்றும் போலீசார் கலந்துகொண்டனர்.

The post மக்கள் குறைதீர் முகாமில் 87 மனுக்களுக்கு உடனடி தீர்வு appeared first on Dinakaran.

Tags : Grievance Camp ,Dharmapuri ,Dharmapuri District Police ,People's Grievance Camp ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை