×

கலைஞர் மகளிர் உரிமை தொகை ரூ.1000 பெற குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கிற்கு ரூ.1 அனுப்பி சோதனை: வருவாய் துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: கலைஞர் மகளிர் உரிமை தொகையான ரூ.1000 பெற தேர்வு செய்யப்பட்ட குடும்ப தலைவிகளின் வங்கி கணக்குகளில் ரூ.1 அனுப்பி பரிசோதனை செய்யப்பட்டு வருதாக வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள குடும்ப தலைவிகள் பயன்பெறும் வகையில் திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் மகளிர் உரிமை தொகை மூலமாக ரூ.1000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இத்திட்டத்திற்காக 1.63 கோடி பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் தகுதியானவர் என தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அந்தவகையில் தகுதி வாய்ந்த விண்ணப்பத்தாரர்களின் வங்கி கணக்குகளை சரிபார்க்கும் பணிகள் தற்போது தொடங்கி உள்ளது.

குறிப்பாக, சென்னை மற்றும் பிற மாவட்டங்களை சேர்ந்த குடும்ப தலைவிகளின் வங்கி கணக்குகளில் கடந்த சில தினங்களாக ரூ.1 அனுப்பி வைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் ரூ.1 அனுப்பியவர்களுக்கு அவர்களின் கைப்பேசியில் குறுஞ்செய்தியாக அனுப்பப்படுகிறது. இந்த சோதனை என்பது தவறான வங்கி கணக்குகளுக்கு உரிமை தொகை போகாத வகையில் வங்கிகள் பரிசோதனை செய்யப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதேபோல, கைப்பேசி வழியாக விண்ணப்பதாரர்களை தொடர்பு கொண்டு வங்கிக் கணக்கு விவரங்கள் உறுதி செய்யப்பட்டும் வருகின்றன. அதன்படி, கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தினை காஞ்சிபுரத்தில் நாளை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார் குறிப்பிடத்தக்கது.

The post கலைஞர் மகளிர் உரிமை தொகை ரூ.1000 பெற குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கிற்கு ரூ.1 அனுப்பி சோதனை: வருவாய் துறை அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...