சென்னை: சென்னை தலைமை செயலகத்திற்கு நேற்று பார்வையற்ற முதியவர் ஒருவர் தனது மனைவி மற்றும் மகனுடன் வந்திருந்தார். இவர்கள், யாரும் எதிர்ப்பார்க்காத நிலையில், திடீரென தங்கள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனடியாக அவர்களை மீட்டனர். விசாரணையில் கடலூர் மாவட்டம் முஷ்ணத்தை சேர்ந்த ஆனந்தன் (50), அவரது மனைவி அலங்காரமேரி (40). இவர்களுடைய மகன் சசிகுமார் (17) என்பதும், இவர்களது மகனுக்கு சட்டக்கல்லூரியில் படிக்க கலந்தாய்வில் சீட் கிடைக்காததாலும், அவர்கள் குடியிருக்கும் 3 சென்ட் நிலத்திற்கு பட்டா கேட்டும் தீக்குளிக்க முயன்றதும் தெரியவந்தது. இதேபோல, தலைமைச்செயலகத்திற்கு மனு அளிக்க வந்த தேனி மாவட்டத்தை சேர்ந்த உலகநாதன் அந்திரியன் தன்மீது பொய்யாக போக்சோ வழக்கு போடப்பட்டதாக கூறி, மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளிக்க முயன்றுள்ளார். அவரையும் மீட்டு விசாரிக்கின்றனர்.
The post தலைமை செயலகம் அருகே மாற்றுத்திறனாளி உள்பட 4 பேர் தீக்குளிக்க முயற்சி: போலீசார் மீட்டனர் appeared first on Dinakaran.
