×

`பந்த்’ அழைப்பு விடுத்த நிலையில் சந்திரபாபுவின் `ஹெரிடேஜ்’ பால் நிறுவனம் இயங்கியது

திருமலை : தெலுங்கு தேசம் கட்சியினர் நேற்று பந்துக்கு அழைப்பு விடுத்த நிலையில் முன்னாள் முதல்வர் சந்திரபாபுவுக்கு சொந்தமான ஹெரிடேஜ் பால் நிறுவனம் இயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று மாநிலம் முழுவதும் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஜனசேனா கட்சியினர் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். அதனால், நேற்று காலை முதல் பஸ்களை ஆங்காங்கே நிறுத்துவது, கடைகளை வலுக்கட்டாயமாக அடைப்பது போன்ற போராட்டங்களில் அக்கட்சியினர் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், திருப்பதி- சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் காசிபண்ட்லா என்ற இடத்தில் சந்திரபாபுவின் சொந்த நிறுவனமான ஹெரிடேஜ் பால் நிறுவனத்தின் அவுட்லெட்டில் பால், பிஸ்கெட், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பால் பொருட்கள் விற்பனை நேற்று வழக்கம்போல் நடந்தது. பார்லரும் திறக்கப்பட்டு வியாபாரம் நடந்தது.

மாநிலம் முழுவதும் தெலுங்கு தேசம் கட்சியினர் வலுக்கட்டாயமாக சாமானிய மக்களின் கடைகளை அடைக்கும்படி கூறிய நிலையில், அவர்களது நிறுவனத்தை மட்டும் திறந்து வைத்து வியாபாரம் செய்வது எந்த விதத்தில் நியாயம் என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். அதேபோல், சந்திரகிரி மற்றும் அந்த பகுதியில் உள்ள அனைத்து கடைகளையும் திறந்து வைத்து வியாபாரத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

The post `பந்த்’ அழைப்பு விடுத்த நிலையில் சந்திரபாபுவின் `ஹெரிடேஜ்’ பால் நிறுவனம் இயங்கியது appeared first on Dinakaran.

Tags : Chandrababu ,Desam ,chief minister ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...