×

ஒரே குடும்பத்தை சேர்ந்த 20 பேர் தீக்குளிக்க முயற்சி

சேலம்: சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. அப்போது சூரப்பள்ளி கிராமம் கல்லுக்காட்டுவளவை சேர்ந்த வெள்ளையன், அவரது தம்பிகளான ராஜூ, அம்மாசி மற்றும் அவர்களின் குடும்பங்களை சேர்ந்த 5 குழந்தைகள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலக நுழைவாயிலில் மண்ணெண்ணெயை உடல் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி தண்ணீரை ஊற்றினர். இதுகுறித்து வெள்ளையன் கூறுகையில், எங்களுக்கு சொந்தமான 54 சென்ட் பூர்வீக நிலத்தை 1999ல் சார் பதிவாளர் அலுவலகத்தில் அண்ணன்-தம்பிகள் அனைவரும் பாகப்பிரிவினை செய்து கொண்டோம். உறவினர் ஒருவர், எங்களது நிலத்தில் சுமார் 7 சென்ட்டை ஆக்கிரமித்து கொண்டார். பொதுப்பாதையை ஆக்கிரமித்ததுடன் எங்களை தகாத வார்த்தையில் பேசியும், அடித்தும் கொலை மிரட்டல் விடுக்கிறார். இதனால் தற்கொலை செய்ய இங்கு வந்தோம் என்றார்.

The post ஒரே குடும்பத்தை சேர்ந்த 20 பேர் தீக்குளிக்க முயற்சி appeared first on Dinakaran.

Tags : Salem ,Salem District Collector's Office ,Surapalli Village ,Kallukaduwala ,Dinakaran ,
× RELATED சென்னை முழுவதும் சீரான குடிநீர்...