- கலைஞர் நூற்றாண்டு மருத்துவ ஆராய்ச்சி மையம்
- எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம்
- அமைச்சர் எம் சுப்பிரமணியன்
- சென்னை
- டாக்டர்
- எம்ஜிஆர் மருத்துவம்
- பல்கலைக்கழக
- அமைச்சர்
- எம் சுப்பிரமணியன்
- தின மலர்
சென்னை: டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கலைஞர் நூற்றாண்டு மருத்துவ ஆராய்ச்சி மையம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி நிறைவடைந்துள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள அரிமா சங்க லேபர் காலனி உயர்நிலைப் பள்ளியில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாமில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: முதல்வரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் 2 ஆண்டுகளுக்கு முன் 1,37,10107 குடும்பங்கள் காப்பீட்டு அட்டையை பயன்படுத்தி வந்தனர். தற்போது 1,44,72338 குடும்பங்களாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் 7,62,231 புதிய குடும்பங்கள் காப்பீட்டு அட்டையை பெற்றுள்ளனர். காப்பீட்டு திட்டத்தின் கீழ் கடந்த ஆட்சியில் 1450 சிகிச்சை முறை இருந்தது. அவை தற்போது 1513 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் 970 மருத்துவமனைகள் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இருந்தது.
தற்போது 1829 மருத்துவமனைகளில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் வருவாய் துறை அலுவலகத்திலும் புதிய காப்பீட்டு அட்டையை பெறுவதற்கான மையங்கள் உள்ளது. கலைஞர் காப்பீட்டு அட்டை வைத்திருப்பவர்கள் மற்றும் முதல்வரின் மருத்துவ காப்பீட்டு அட்டை இல்லாதவர்கள் முகாம்களை பயன்படுத்தி புதிய அட்டையை பெற்றுக் கொள்ளலாம்.
மருத்துவ துறையின் அடுத்த கட்டமாக மருத்துவ ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கலைஞர் நூற்றாண்டு மருத்துவ ஆராய்ச்சி மையம் கட்டப்பட உள்ளது. அதற்கான இடம் தேர்வு செய்யும் பணி நிறைவு பெற்றிருக்கிறது. திட்ட மதிப்பீடு மற்றும் வரைபடம் தயாரிக்கும் பணியில் பொதுப்பணி துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். பணிகள் நிறைவடைந்த உடன் ஒப்பந்தங்கள் விடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
The post எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.100 கோடியில் கலைஞர் நூற்றாண்டு மருத்துவ ஆராய்ச்சி மையம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் appeared first on Dinakaran.
