×

தேயிலை விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: தேயிலை விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; நீலகிரி மாவட்டதில் 65 ஆயிரம் சிறு தேயிலை விவசாய குடும்பங்களும், சுமார் 2 லட்சம் தோட்ட தொழிலாளர் குடும்பங்களும் மற்றும் தேயிலை வியாபாரத்தை மட்டும் நம்பியுள்ள வியாபார குடும்பங்கள் என்று கிட்டத்தட்ட 75% சதவிகித மக்கள் தேயிலை தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டு இருக்கிறார்கள். இப்படி இருக்க தேயிலையின் விலை வீழ்ச்சியடைந்து, மொத்த மாவட்டமும் பொருளாதார வீழ்ச்சியை அடைந்திருக்கிறது.

இந்நிலையில் நீலகிரி தேயிலை தொழில் மீண்டும் செழிக்க, பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள, மத்திய, மாநில அரசுகளுக்கு பல்வேறு கோரிக்கைகளை விடுத்துள்ளார்கள். அவற்றில் முக்கியமாக, தேயிலையை அந்நிய நாட்டில் இருந்து இறக்குமதி செய்யக் கூடாது, இந்திய ராணுவத்திற்கு தேவையான தேயிலையை அரசே நீலகிரி மாவட்டத்தில் இருந்து கொள்முதல் செய்ய வேண்டும். தேயிலை ஏலமையத்தில் நடக்கும் முறைகேடுகளை தடுக்கும் வண்ணம் மத்திய அரசு அமைத்த சிறப்பு வாய்ந்த திட்டமான M/S.A.F. Furguson அன்ட் Company அளித்த பரிந்துறைகளை அமுல்படுத்த வேண்டும்.

தமிழக அரசு சிறுதேயிலை விவசாயிகளின் தேயிலையை அதிய அளவில் தமிழக அரசு நிறுவனமான (Indco Serve) மூலம் கொள்முதல் செய்து அதை தமிழக அரசு பொது வினியோக திட்டத்தின் மூலம் பொது மக்களுக்கு வழங்க வேண்டும். மேலும் தமிழக அரசு பச்சை தேயிலையில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களை தயாரிக்கும் சிறுதேயிலை விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய 14 வருடங்கள் திருப்பி செலுத்தக் கூடிய வட்டியில்லா கடன் உதவியை வழங்கவேண்டும். மத்திய அரசு நிறுவனமான தேயிலை வாரியம் தேயிலை சட்டம் 1953 பிரிவு 30ன் கீழ் குறைந்தபட்ச விலையாக உற்பத்தி செலவு கிலோ ஒன்றுக்கு ரூ.24 உடன் வாழ்வாதாரத்திற்கு ரூ.10 சேர்த்து ரூ.34 ஆக விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.

மேலும் சிறு தேயிலை விவசாயிகள் மற்றும் வியாபாரிகளின் நியாயமான கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் உரிய ஆலோசனை செய்து நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

The post தேயிலை விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Central and state governments ,G. K.K. Vasan ,Chennai ,Congress of Tamil ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...