×

பள்ளி குடிநீர் தொட்டியில் சாணம் கலப்பு: போலீஸ் வழக்குப்பதிவு

விருதுநகர்: விருதுநகர் அருகே பள்ளி குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் அருகே சின்னமூப்பன்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு குடிநீர் தொட்டி வைத்து கொடுத்துள்ளனர். இதில் நேற்று முன்தினம் மாலை ஊராட்சி சார்பில் தண்ணீர் விடப்படுவதை அறிந்து, பொறுப்பாளர் முத்துலட்சுமி பள்ளிக்கு வந்து குடிநீரை சின்டெக்ஸ் தொட்டியில் ஏற்றி விட்டு குழாயை திறந்தார். அப்போது குழாயில் இருந்து துர்நாற்றத்துடன் மஞ்சள் நிறத்தில் தண்ணீர் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்து தொட்டியின் மூடியை திறந்து பார்த்தபோது உள்ளே மாட்டுச்சாணம் கிடந்தது.

இதுகுறித்து ஊர் பெரியவர்களிடம் தகவல் தெரிவித்த அவர், குடிநீர் தொட்டியை கழுவி தண்ணீர் பிடித்து வைத்து விட்டு சென்றார். இதேபோல் கடந்த 2 நாட்களுக்கு முன்பும் நடந்ததால், பள்ளி ஆசிரியையிடம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து வட்டாட்சியர் செந்தில்வேல், திட்ட அலுவலர் முருகன், மாவட்ட தொடக்கப்பள்ளி அலுவலர் அசோக்குமார் நேற்று பள்ளிக்கு வந்து விசாரணை நடத்தினர். விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

மேலும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், கற்பகவள்ளி ஆய்வு செய்து பள்ளியின் வெளிப்புறம் இருந்த சின்டெக்ஸ் டேங்கை அகற்றி, புதிய சின்டெக்ஸ் டேங்க் வைத்தனர். மேலும் சின்டெக்ஸ் டேங்கிற்கு கிரில் கேட் அமைத்துள்ளனர்.

The post பள்ளி குடிநீர் தொட்டியில் சாணம் கலப்பு: போலீஸ் வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,
× RELATED சென்னை முழுவதும் சீரான குடிநீர்...