![]()
கும்பகோணம்: ஜெயிலர் படத்தின் இசைக்கு ஏற்ப கும்பகோணம் கோயில் யானை நடனமாடும் வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆதி கும்பேஸ்வரர் கோயிலில் பராமரிக்கப்பட்டு வரும் யானை மங்களம் சுட்டித்தனம் உடையது. மங்களம் யானை, பாகன்களுடன் குறும்புத்தனம் செய்யும் பல வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது பரவி வரவேற்பை பெற்று வந்தன. தற்போது யானை மங்களம் சமீபத்தில் வெளியான நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தின் பின்னணி தீம் இசைக்கு ஏற்ப தலையை ஆட்டி உற்சாகமாக நடனம் ஆடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், ‘‘மங்களம் யானை குழந்தைபோல குறும்புத்தனத்துடன் நடந்து கொள்ளும். இது கோயிலுக்கு வரும் பக்தர்களையும் குழந்தைகளுக்கு வியப்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும். தற்போது மங்கலம் யானை ஜெயிலர் படத்தில் வரும் தீம் இசைக்கு ஏற்ப நடனமாடும் காட்சி உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும் வகையில் உள்ளது’’ என்றனர்.
The post ஜெயிலர் படத்தின் இசைக்கேற்ப நடனமாடும் மங்களம் யானை appeared first on Dinakaran.
