×

சென்னையில் வரும் 22ம் தேதி தெருவோர குழந்தைகளுக்கான உலக கோப்பை கிரிக்கெட்

சென்னை: தெருவோர குழந்தைகளுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி முதல்முறையாக இங்கிலாந்தில் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்றது. அதில் தண்டையார்பேட்டை சேனியம்மன் கோயில் தெருவில் உள்ள கருணாலயா தொண்டு நிறுவனத்தில் வசிக்கும் தெருவோர குழந்தைகள் இந்தியா சார்பில் கலந்து கொண்டு உலகக் கோப்பையை வென்று வந்தனர். அதேபோல் 2023ம் ஆண்டுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி சென்னையில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் மொத்தம் 15 நாடுகள் கலந்து கொள்கின்றன.

இதில் இந்தியா சார்பில் கருணாலயா தொண்டு நிறுவனத்தில் பராமரிக்கப்பட்டு வரும் தெருவோர குழந்தைகள் அணியின் 8 பேரை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன், பிரான்ஸ் துணை தூதர் ஹார்வர் பெல் ஆன்செட் மற்றும் கருணாலயா தொண்டு நிறுவன செயலாளர் பால் சுந்தர் சிங் ஆகியோர் குழந்தைகளை அறிமுகப்படுத்தி வைத்தனர். இந்த போட்டி வரும் 22ம் தேதி தொடங்கி 30ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா உள்பட 14 நாடுகள் பங்கேற்கின்றன.

The post சென்னையில் வரும் 22ம் தேதி தெருவோர குழந்தைகளுக்கான உலக கோப்பை கிரிக்கெட் appeared first on Dinakaran.

Tags : World Cup Cricket for Street Children ,Chennai ,World Cup Cricket ,England ,Dinakaran ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...