திருவள்ளூர்: திமுக சிறுபான்மையினர் நல உரிமை பரிவின் சார்பில் தொடர் சாதனை விளக்க திண்ணைப் பிரசார கூட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவின் சார்பில், கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சரின் திராவிட மாடல் அரசின் தொடர் சாதனை விளக்க கூட்டம் மற்றும் 2024ம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைக்கான திண்ணை பிரசாரக் கூட்டம் திருவள்ளூர், முகமது அலி தெருவில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு, சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு மாவட்ட அமைப்பாளர் ஜி.சித்திக் அலி தலைமை தாங்கினார். சிறுபான்மையினர் நல உரிமை பிரிவின் மாவட்ட தலைவர் அயூப்அலி, நகர செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட துணை அமைப்பாளர் ஏ.பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் அஸ்ஸலாம், அப்துல் ரஹீம், பவளவண்ணன், நரேஷ் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.
இந்தக் கூட்டத்தில், திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு திண்ணை பிரசாரக் கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மேலும், தலைமைக் கழக பேச்சாளர்கள் அரங்கநாதன், முரசொலி மூர்த்தி ஆகியோர் திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனைகள் குறித்து பொதுமக்களிடையே எடுத்துரைத்தனர். இதில், மாவட்ட அவைத் தலைவர் கே.திராவிட பக்தன், நகர மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் கூளூர் எம்.ராஜேந்திரன், கே.அரிகிருஷ்ணன், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் பி.கே.நாகராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் புவனேஷ்குமார், மிஸ்டர் தமிழ்நாடு டி.ஆர்.திலீபன், நகராட்சி கவுன்சிலர்கள் பிரபாகரன், விஜயகுமார் மற்றும் மஞ்சுளா குமார், வீனஸ், மோகன், விஜி, முனுசாமி, கருணா, ஜெய் பிரகாஷ், பாண்டியன், தினேஷ், பாலாஜி, கவிதா, கற்பகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post திமுக சார்பில் திண்ணை பிரசார கூட்டம்: எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.
