×

பாலில் தூக்க மாத்திரைகள் கலந்து கொடுத்து தாய், பாட்டியை தூங்க வைத்துவிட்டு வீடுபுகுந்து தினமும் சிறுமியுடன் ஜாலி: வீதியில் நடந்த சண்டையால் அம்பலமானது

அண்ணாநகர்: தினமும் பாலில் தூக்க மாத்திரைகளை கலந்து தாய், பாட்டியை தூங்கவைத்துவிட்டு சிறுமியிடம் வாலிபர் ஜாலியாக இருந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை முகப்பேர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி அருகே இரண்டு பேர் சரமாரியாக தாக்கி கொள்வதாக கிடைத்த தகவல்படி, நொளம்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். இதன்பின்னர் அங்கு தகராறு செய்துகொண்டிருந்த 2 பேரையும் காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். சிறுமி பிரச்னை சம்பந்தமாக தகராறு ஏற்பட்டுள்ளது தெரிந்ததால் அவர்களை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இவர்களிடம் மகளிர் போலீசார் நடத்திய விசாரணையில் கிடைத்துள்ள தகவல்கள் வருமாறு;
பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சிறுமியின் பெரியப்பா கூறுகையில்,’’எனது தம்பி மகள் 15வயது சிறுமியிடம் காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி தினமும் சிறுமியை வாலிபர் டார்ச்சர் செய்துள்ளார்’ என்றார்.

இதையடுத்து சிறுமியின் தாயை அழைத்து விசாரித்தபோது, ‘’கடந்த 6 மாதத்துக்கு முன்பு போரூர் பகுதியில் வசித்துவந்த மன்னார்குடி மாவட்டத்தை சேர்ந்த 22 வயது நபர், 10ம் வகுப்பு படித்துவரும் எனது மகளை காதலிப்பதாக கூறி போரூரில் உள்ள விநாயகர் கோயிலில் தாலி கட்டியுள்ளார். இது தெரிந்ததும் வளசரவாக்கம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தோம். இதன்பின்னர் கடந்த 4 மாதத்துக்கு முன்பு மகளை மன்னார்குடி மாவட்டத்துக்கு கடத்தி சென்றுவிட்டார். இதுகுறித்து வளசரவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் 2 பேரையும் போலீசார் மீட்டனர். இதன்பின்னர் சிறுமியிடம் தொந்தரவு செய்யக்கூடாது என்று வாலிபரை கடுமையாக எச்சரித்து அனுப்பினர். நேற்றுமுன்தினம் இரவு எனது மகள், தூக்க மாத்திரைகளை எனக்கும் எனது தாய்க்கும் கொடுத்ததால் நாங்கள் இருவரும் தூங்கிவிட்டோம்.

தினமும் வழக்கத்தைவிட இரவு நேரத்தில் எதற்காக இவ்வளவு அசந்து தூக்கம் வருகிறது என்பதால் மகள் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனால் மகளின் பையை சோதனை செய்தபோது அதில் ஏராளமான தூக்க மாத்திரைகள் இருந்தது. மேலும் அந்த வாலிபர் எனது மகளுக்கு புதிய செல்போன் வாங்கி கொடுத்து அந்த செல்போனில் தினமும் பேசி இரவு நேரத்தில் தூக்க மாத்திரைகளை பாலில் போட்டு கொடுக்க சொல்லியுள்ளார். இதன்படி அவர் தூக்க மாத்திரைகளை எங்களுக்கு கொடுத்துவிட்டு தூங்கியதும் வாலிபர் வந்து மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.இவ்வாறு தெரியவந்துள்ளது.

இதையடுத்து சிறுமியிடம் போலீசார் விசாரணை செய்ததில் தினமும் இரவு நேரத்தில் தாய், பாட்டிக்கு பாலில் தூக்க மாத்திரை கொடுத்து தூங்கவைத்த பிறகு வாலிபர் வீட்டுக்கு வந்து பாத்ரூமில் வைத்து பாலியல் தொந்தரவு கொடுத்தார் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து சிறுமியை கெல்லீஸ் சிறுவர்கள் சீர்திருத்த பள்ளியில் ஒப்படைத்தனர். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து வாலிபரை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

 

The post பாலில் தூக்க மாத்திரைகள் கலந்து கொடுத்து தாய், பாட்டியை தூங்க வைத்துவிட்டு வீடுபுகுந்து தினமும் சிறுமியுடன் ஜாலி: வீதியில் நடந்த சண்டையால் அம்பலமானது appeared first on Dinakaran.

Tags : Annanagar ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...