ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் நீட் தேர்வுக்கு பயிர்ச்சி பெற்று வந்த மேலும் ஒரு மாணவர் தற்கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் கரெளலி மாவட்டத்தை சேர்ந்த கவுசல் குமார் என்பவர் சிகார் மாவட்டத்தில் உள்ள நீட் தேர்வு பயிற்சி மையத்தில் படித்து வந்தார். நேற்று பிற்பகல் 12 மணியளவில் மதிய உணவுக்காக விடுதிக்கு சென்ற மாணவர் அறையின் கதவை பூட்டிக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வெகு நேரமாகியும் மாணவர் வராததால் அவர்களது நண்பர்கள் தெரிவித்த தகவலை அடுத்து அங்கு விரைந்த போலீசார் தற்கொலை செய்த மாணவர் கவுசல் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஏற்கனவே கோட்டா மாவட்டத்தில் நீட் பயிற்சி மையத்தில் வழக்கமான தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்ற மராட்டியம், பீகார் மாநிலங்களை சேர்ந்த 2 மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்தது நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், மேலும் ஒரு மாணவர் தற்கொலை செய்திருப்பதால் இந்த ஆண்டு மட்டும் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த 24 பேர் உயிரிழந்து இருக்கின்றனர்.
The post ராஜஸ்தானில் மேலும் ஒரு மாணவர் தற்கொலை: இந்த ஆண்டில் மட்டும் நீட் தேர்வால் 24 பேர் உயிரை மாய்த்து கொண்ட சோகம் appeared first on Dinakaran.
