×

யுஎஸ் ஓபன் டென்னிஸ் 4வது சுற்றில் ஜெசிகா, ஆன்ஸ்

நியூயார்க்: யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. அதன் 3வது சுற்று ஆட்டங்கள் நேற்றுடன் முடிவடைந்தன. காலிறுதிக்கு முந்தைய 4வது சுற்று ஒற்றையர் பிரிவில் விளையாட உள்ளவர்களில் அமெரிக்கர்களே அதிகம். ஆடவர், மகளிர் என2 பிரிவுகளிலும் தகுதிப்பெற்ற தலா 16பேரில் தலா 4பேர் அமெரிக்கர்கள். மகளிர் பிரிவு 3வது சுற்று ஆட்டம் ஒன்றில் அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலா(29வயது, 3வது ரேங்க்), உக்ரைன் வீராங்கனை எலனா ஸ்விடோலினா(29வயது, 26வது ரேங்க்) ஆகியோர் மோதினர். ஒரு மணி 51நிமிடங்கள் நடந்த ஆட்டத்தின் முடிவில் ஜெசிகா 6-4, 4-6, 6-2 என்ற புள்ளிக் கணக்கில் வென்று 4வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ்(28வயது, 17வது ரேங்க்) 2மணி 8 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தில் 5-7, 6-2, 6-2 என்ற செட்களில் ரஷ்ய வீராங்கனை லிட்மிலா சாம்சனோவா(24வயது, 15வது ரேங்க்)வை வீழ்த்தி 4வது சுற்றுக்குள் நுழைந்தார். ஒரே அரேபிய வீராங்கனையான ஆன்ஸ் ஜெபர்(29வயது, 5வது ரேங்க்) 2மணி 56நிமிடங்கள் நீண்ட ஆட்டத்தை 5-7, 7-6(7-5), 6-3 என்ற செட்களில் செக் குடியரசு வீராங்கனை மரி பவுஸ்கோவா(25வயது, 31வது ரேங்க்)வை வென்று கடைசி வீராங்கனையாக 4வது சுறறுக்கு தகுதிப் பெற்றார்.

The post யுஎஸ் ஓபன் டென்னிஸ் 4வது சுற்றில் ஜெசிகா, ஆன்ஸ் appeared first on Dinakaran.

Tags : US Open Tennis ,Jessica ,Anns ,New York ,US Open Grand Slam ,New York City, USA ,Annes ,Dinakaran ,
× RELATED சீனா ஓபன் டென்னிஸ்: 3வது சுற்றில் பெகுலா