×

ஹாக்கி தகுதி சுற்று பைனல் இங்கி. மகளிரிடம் இந்தியா தோல்வி

ஐதராபாத்: எப்ஐஎச் மகளிர் ஹாக்கி உலகக்கோப்பை தகுதிச் சுற்று இறுதிப் போட்டியில் நேற்று இந்தியா – இங்கிலாந்து மகளிர் அணிகள் மோதின. துவக்கத்தில் இந்திய அணி வீராங்கனைகள் சிறப்பாக ஆடியபோதும், போட்டியின் 13வது நிமிடத்தில் இங்கிலாந்து அணிக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி அந்த அணியின் கிரேஸ் பால்ஸ்டன் முதல் கோல் போட்டார். இந்திய மகளிர், 23 மற்றும் 36வது நிமிடங்களில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக்கத் தவறினர். அதேசமயம் 43வது நிமிடத்தில் இங்கிலாந்து மேலும் ஒரு கோல் போட்டது. அதனால் 2-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்திய அணி இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தபோதும், வரும் ஆகஸ்டில் நடைபெறும் உலகக்கோப்பை போட்டியில் ஆட ஏற்கனவே தகுதி பெற்று விட்டது.

Tags : Hockey Qualifier Final ,England ,India ,Hyderabad ,FIH Women's Hockey World Cup Qualifiers ,
× RELATED சில்லி பாய்ன்ட்…