×

ஆவடியில் இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம்; தமிழ்நாட்டின் நலத்திட்டங்களை இந்தியாவே பாராட்டி வருகிறது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலில் பெருமிதம்

ஆவடி: திமுக இளைஞர் அணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், திமுக இளைஞர் அணி செயல்வீரர் கூட்டத்தில் கலந்து கொள்ள திருவள்ளூர் வருகை புரிந்தார். அவருக்கு திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர் தலைமையில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. பிறகு ஆவடியில் கவரப்பாளையம் கலைஞர் திடல் நடைபெற்ற இளைஞரணி செயல்வீரர் கூட்டத்தில் கே.சுரேஷ்குமார் வரவேற்புரை நிகழ்த்தினார். திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் டி.ஜே.கோவிந்தராஜன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் பிரபு கஜேந்திரன், அப்துல்மாலிக், பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன், மேற்கு மாவட்ட அமைப்பாளர் ம.கிரன், ஜி.துர்கா பிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் டிசம்பர் மாதம் சேலம் மாநாட்டிற்கு நன்கொடையாக திருவள்ளூர் மாவட்ட திமுக சார்பில் ஒரு கோடியே 50 லட்சம் காசோலையையும், திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழகம் சார்பாக செயலாளர் டி.கே.எஸ்.கோவிந்தராஜன் ஒரு கோடியே காசோலையையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினர்.

கூட்டத்தில் அமைச்சர் பேசும் போது கூறியதாவது: எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அடிமை ஆட்சியில்தான் நீட் தேர்வு தமிழகத்திற்குள் நுழைந்தது. கலைஞர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிருடன் இருக்கும் வரை தமிழ்நாட்டில் நீட் நுழையாமல் தமிழக மாணவர்கள் பாதுகாப்பாக இருந்தார்கள். நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என்றால் ஒரு உதயநிதியால் மட்டும் முடியாது. நீங்கள் எல்லோரும் உதயநிதியாக மாறி களத்தில் இறங்கினால் மட்டுமே நீட்டை ஒழிக்க முடியும். கடந்த 2017ம் ஆண்டில்தான் நீட் தேர்வை முதல் உயிர் பலி நடந்தது. அரியலூர் அனிதாவில் தொடங்கி தற்போது வரை 21 மாணவர்களை நீட் தேர்வு கொன்று இருப்பதாக கூறினார்.

தற்போது மாணவர்கள் மட்டும் அல்லாமல் அவர்களின் பெற்றோர்களையும் பலி கொடுத்து வருகிறது. நீட் தேர்வை ஒரு உதயநிதியால் மட்டும் தடுத்து நிறுத்தி விட முடியாது. நீங்கள் ஒவ்வொருவரும் உதயநிதியாக மாறினால் மட்டுமே நீட் தேர்வை ஒழிக்க முடியும். காலை உணவு திட்டத்தை எல்லோரும் பாராட்டி வருகிறார்கள். தெலுங்கானா அரசு ஆய்வு செய்து பாராட்டியுள்ளது. அதே போன்று இந்தியாவில் உள்ள மற்ற மாநில முதலமைச்சர்கள் அதிகாரிகள் பாராட்டி வருகிறார்கள். திராவிட மாடல் என்பது அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதுதான். முடிவில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நடுக்குத்தகை கே.சுரேஷ்குமார் நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியில் ஆவடி மாநகராட்சி பணிக்குழு தலைவர் ஆசிம் ராஜா, ஆவடி பகுதி செயலாளர் பேபி சேகர், ஆவடி மண்டல குழு தலைவர் அமுதாபேபிசேகர், பூந்தமல்லி நகர செயலாளர் திருமலை, நகர் மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர், துணைத் தலைவர் தர், மாவட்ட பிரதிநிதி சுதாகர், திருவேற்காடு நகர செயலாளர் நகர் மன்ற தலைவர் மூர்த்தி, திருநின்றவூர் யோகா, 6வது மாமன்ற உறுப்பினர் யோகாதேவி, திருநின்றவூர் நகரக் கழக பொருளாளர் அணி அமைப்பாளர் பிரசன்னா, மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் இளங்கோவன், வழக்கறிஞர் வினோத் உள்பட அணிகளின் தலைவர்கள் துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், நிர்வாகிகள், வட்ட செயலாளர்கள் கிளைக் செயலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

The post ஆவடியில் இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம்; தமிழ்நாட்டின் நலத்திட்டங்களை இந்தியாவே பாராட்டி வருகிறது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலில் பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : Avadi ,India ,Tamil Nadu ,Minister ,Udayanidhi Stahl ,Aavadi ,DMK Youth League ,Udayanidhi Stalin ,Youth League ,Udayanidhi Stalil ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...