![]()
நாகர்கோவில்: நாகர்கோவிலில் தனியார் கல்லூரி ஒன்றில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு நன்கொடை கேட்டு இந்து சேனா கட்சி நிர்வாகி என சிலர் அத்துமீறும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. நாகர்கோவில் வடசேரி பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரிக்கு சென்ற மூவர் தங்களை இந்து சேனாகட்சி நிர்வாகிகள் என அறிமுகப்படுத்திக்கொண்டு விநாயகர்சதுர்த்தி விழாவிற்கு நன்கொடை கேட்டுள்ளனர்.
ஆனால் இதே கட்சி பெயரில் பலர் வருவதால் நன்கொடை வழங்க கல்லூரி நிர்வாகத்தினர் மறுத்துள்ளனர். அப்போது நாங்க இந்துசேனா எங்களுக்கு பணமில்லையா என மிரட்டும் தொணியில் அவர்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கல்லூரி நிர்வாகத்தினர் நன்கொடை வழங்க மறுத்ததால் மூவரும் காரில் ஏறி அங்கிருந்து வெளியேறினர். நன்கொடை என்ற பெயரில் மிரட்டும் தொனியில் வாக்குவாதம் செய்த இந்த கட்சி இணையத்தில் பரவி வருகிறது.
The post நாகர்கோவிலில் நன்கொடை கேட்டு அத்துமீறும் நபர்கள்: இந்து சேனா என மிரட்டும் வீடியோ இணையத்தில் பரவல் appeared first on Dinakaran.
