×

அரசு பஸ் டிரைவர் மீது தாக்குதல்

திருச்சி, ஆக. 30: திருச்சியில் அரசு பஸ் டிரைவர் மீது தாக்குதல் நடத்திய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி ரங்கம் அம்மாப்பேட்டை அண்ணா நகரை சேர்ந்தவர் திருமுருகன்(43). இவர் அரசு பஸ்சில் டிரைவராக பணியாற்றி வருகிறார். கடந்த 27ம்தேதி இரவு சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து துவாக்குடி செல்லும் டவுன் பஸ்சை ஓட்டி சென்றார். அப்போது படிக்கட்டில் நின்று கொண்டு 4 வாலிபர்கள் பயணம் செய்துள்ளனர். அவர்களை மேலே ஏறும்படி திருமுருகன் கூறியுள்ளார். ஆனால் மேலே ஏற மறுத்து டிரைவரை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளனர். உடனே பஸ்சை நிறுத்திய டிரைவர் கீழே இறங்கி 4 பேரையும் மேலே ஏறும்படி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 4 பேரும் கீழே கிடந்த டைல்ஸ் கல்லால் டிரைவரை தாக்கி விட்டு தப்பி ஓடினர். இதில் மண்டை உடைந்து படுகாயமடைந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து டிரைவர் திருமுருகன் கொடுத்த புகாரின் பேரில் அடையாளம் தெரியாத 4 பேர் மீது கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அரசு பஸ் டிரைவர் மீது தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : Trichy ,Trichy.… ,Dinakaran ,
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...