×

செட்டிகுளம் அரசு பள்ளியில் ஆலத்தூர் குறுவட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டி துவக்கம்

பாடாலூர், ஆக 30:பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆலத்தூர் குறுவட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் துவக்க விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் மணிவண்ணன் தலைமை வகித்தார். தனியார் பள்ளி தாளாளர்கள் தமிழ்வாணன், கேசவ் பாலாஜி, பழனிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் உடற்கல்வி ஆய்வாளர் ராஜேந்திரனால் தேசியக்கொடி, ஒலிம்பிக் கொடி ஆலத்தூர் குறுவட்ட கொடி ஏற்றப்பட்டது. 11ம் வகுப்பு மாணவி கண்மணியால் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு பின்னர் மாணவர்களின் அணிவகுப்பும் நடைபெற்றது.

நிகழ்வில் ஆலத்தூர் தாலுகாவில் உள்ள பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 400 மாணவ மாணவிகள் மற்றும் 30 உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் கலா தங்கராசு, ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் திருநாவுக்கரசு முன்னாள் மாணவர்கள் நல சங்க செயலாளர் ராஜாசிதம்பரம், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
மாணவர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழை வழங்கி கவுரவித்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் மணி, அறிவழகன், ஏகாம்பரம், பள்ளி ஆசிரியர்கள், கிராமபொதுமக்கள் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.

The post செட்டிகுளம் அரசு பள்ளியில் ஆலத்தூர் குறுவட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டி துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Chettikulam ,Government School Aladhur CD Level Athletics Competition Inauguration ,Padalur ,Perambalur district ,Alathur taluk ,Chettikulam Government High School Alathur CD ,Chettikulam Government School Alathur CD ,Dinakaran ,
× RELATED செட்டிக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்க் கூடல் விழா