- சிறுவாச்சூர் துணை பிரிவு
- தெற்கு செட்டிகுளம் பிரிவு
- வடக்கு செட்டிகுளம்
- நாகசேலம் பிரிவு
- பெரம்பலூர்
- பெரம்பலூர் மின்சார வாரியம்
- சிறுவாச்சூர் சப்-டிவிஷன்
- நக்கசேலம் பிரிவு அலுவலகங்கள்
- தின மலர்
பெரம்பலூர், ஜூலை 3: சிறுவாச்சூர் உபகோட்டம்- தெற்கு செட்டிக்குளம் பிரிவுக்கு உட்பட்ட மின் பகிர்மானங்கள் அருகில் உள்ள வடக்குசெட்டிக்குளம் மற்றும் நக்கசேலம் பிரிவு அலுவலகங்களுக்கு மாற் றம் செய்யப்பட்டுள்ளது என பெரம்பலூர் மின்சார வாரிய கோட்ட செயற்பொ றியாளர் (இயக்குதலும் காத்தலும்) அசோக்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறி விப்பில் தெரிவித்திருப்ப தாவது :
பெரம்பலூர் மின் பகிர் மான வட்டம், பெரம்பலூர் கோட்டம், சிறுவாச்சூர் உப கோட்டம்- தெற்கு செட்டிக் குளம் பிரிவு அலுவலகம் மூடப்பட்டு, புதிதாக பெரம்ப லூர் நகர், உப கோட்டத்தில் துறைமங்கலம் என்ற பிரிவு அலுவலகம் மின் வட்ட சீரமைப்பு காரணமாக துவங்கப்பட்டது. எனவே மூடப்பட்ட தெற்கு செட்டிக் குளம் பிரிவுக்கு உட்பட்ட மின் பகிர்மானங்களை, அருகிலுள்ள வடக்கு செட்டிக்குளம் மற்றும் நக்க சேலம் பிரிவு அலுவலகங் களுக்கு மாற்றம் செய்யப் பட்டுள்ளது.
மாவிலங்கை,விராலிப்பட்டி, குரூர் ஆகிய மின் பகிர் மானங்கள் வடக்கு செட்டிக் குளம் பிரிவிற்கும், கண் ணாபாடி மற்றும் சிறுவய லூர் ஆகிய மின் பகிர்மா னங்கள் நக்கசேலம் பிரிவிற்கும் தற்போது மாற் றம் செய்யப்பட்டுள்ளது. எனவே மாவிலங்கை, விராலிப்பட்டி, குரூர் மின் பகிர்மானத்தில் உள்ள அனைத்து மின் பயனாளிக ளும் மின்சார சம்பந்தமான அனைத்திற்கும் வடக்கு செட்டிக்குளம் பிரிவு அலுவ லகத்தையும் மற்றும் கண் ணாபாடி மற்றும் சிறுவய லூர் பகிர் மானத்திலுள்ள அனைத்து மின் பயனாளி களும் மின்சார சம்பந்த மான அனைத்திற்கும் நக்க சேலம் பிரிவு அலுவலகத் தையும் அணுகுமாறு கேட்டுக்கொள்ளப் படுகி றது என பெரம்பலூர் கோட்ட செயற்பொறியாளர் (இயக்குதலும் காத்தலும்) அசோக்குமார் வெளியிட்டு ள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
The post சிறுவாச்சூர் உப கோட்டம், தெற்கு செட்டிக்குளம் பிரிவு மின் பகிர்மானம் வடக்கு செட்டிக்குளம், நக்கசேலம் பிரிவு அலுவலகங்களுக்கு மாற்றம் appeared first on Dinakaran.