சிவகங்கை: தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் உள்ள உணவகங்கள் மற்றும் கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள படையப்பா என்ற உணவகத்தில் தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. அதன்படி அங்கு சென்ற உணவு பாதுகாப்பு அலுவலர் வேல்முருகன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.
அப்போது அங்கு சமைத்து மிச்சமான நண்டு, சிக்கன், மட்டன், மீன் குழம்பு மற்றும் சாதம், ஃபிரைட் ரைஸ், நூடுல்ஸ் உள்ளிட்டவை பிரிட்ஜில் வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. மேலும், கெட்டுப்போன இறைச்சியும் இருந்துள்ளது. அவற்றை அதிகாரிகள் பினாயில் ஊற்றி அழித்தனர். திறந்தவெளி சாக்கடைக்கு அருகே இந்த கடையின் சமையலறை இருந்தது. எனவே அதனை மாற்றியமைக்க அறிவுறுத்தி நோட்டீஸ் வழங்கிய அதிகாரிகள் கடையை 5 நாட்கள் மூட உத்தரவிட்டனர்.
இதேபோல கள்ளக்குறிச்சி பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் தரமற்ற மற்றும் சுகாதாரமற்ற பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அங்கு நடத்திய சோதனையின் போது ரசாயனம் கலந்த குளிர்பானங்கள், கலப்பட டீ தூள், தரமற்ற தின்பண்டங்கள் இருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் விற்பனை செய்த கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கினர்.
The post தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் உள்ள உணவகங்கள், கடைகளில் சோதனை: கெட்டுப்போன இறைச்சி, பழைய உணவகங்கள் பறிமுதல் appeared first on Dinakaran.
