×

தா.பேட்டை அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாலை மறியல்

தா.பேட்டை, ஆக. 23: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பெருகனூர் பகுதி மக்களின் அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தா.பேட்டை அடுத்த ஊரக்கரை பஸ் நிறுத்தம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் தங்கராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் ராமநாதன், ஒன்றிய செயலாளர் சேகர், சி.பி.எம் ஒன்றிய செயலாளர் பாண்டியன், மாற்றுத்திறனாளி சங்க மாவட்டத் துணைத் தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கோரிக்கைகள் குறித்து பேசினர்.

தகவல் அறிந்த தா.பேட்டை ஊராட்சி ஒன்றிய திட்ட ஆணையர் குணசேகரன், தா.பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் ஆகியோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கோரிக்கைகள் குறித்து உரிய பரிசீலனை செய்வதாக அதிகாரிகள் கூறியதையடுத்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

The post தா.பேட்டை அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Farmers Association ,Tha.Petai. ,Tha Petty ,Tamil Nadu Farmers' Association ,Tha. Pettai ,Perukanur ,Dinakaran ,
× RELATED மழையால் பாதித்த பயிர்களுக்கு...