லாகூர்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் (70) தனது ஆட்சிக் காலத்தில் அவரும், அவரது குடும்பத்தினரும் பெற்ற பரிசுப் பொருட்களை சட்டவிரோதமாக விற்ற வழக்கில் 3 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டார். கடந்த 5ம் தேதி முதல் அவர் பஞ்சாப் மாகாண அட்டாக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கு மிக குறைந்த வசதிகள் கொண்ட சி பிரிவு சிறை அறையே இம்ரானுக்கு தரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் சிறையில் இம்ரானை சந்தித்த அவரது மனைவி புஷ்ரா பீவீ, பஞ்சாப் உள்துறை செயலாளருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: சிறையில் எனது கணவரை கொல்ல 2 முறை முயற்சி நடந்துள்ளது. அதில் தொடர்புடையவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை. இன்னமும் அவரது உயிருக்கு ஆபத்து உள்ளது. அட்டாக் சிறையில் எனது கணவர் விஷம் வைத்து கொல்லப்படுவார் என அச்சப்படுகிறேன்.இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
The post பாகிஸ்தான் சிறையில் இம்ரான் விஷம் வைத்து கொல்லப்படலாம்: மனைவி பரபரப்பு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.
