×

ஆளுநர் ரவி குடும்பத்துடன் டெல்லி பயணம்

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது குடும்பத்துடன் 3 நாள் பயணமாக டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று காலை 7.05 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் தனது குடும்பத்துடன் 3 நாள் பயணமாக டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். அவருடன் அவரது மனைவி, மகள் மற்றும் செயலாளர், உதவியாளர், பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் சென்றனர். 3 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றிருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி, வரும் 20ம் தேதி இரவு 8.20 மணியளவில் விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானத்தில் டெல்லியில் இருந்து சென்னைக்கு திரும்புகிறார். சமீபகாலமாக நீட் தேர்வு குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவியின் சர்ச்சை பேச்சு காரணமாக, தமிழ்நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்புகிறது. அதோடு, திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில், தமிழ்நாடு முழுவதும் ஆளுநரை கண்டித்து வரும் 20ம் தேதி (நாளை) உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. இந்நிலையில், நேற்று காலை 3 நாள் பயணமாக குடும்பத்துடன் ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post ஆளுநர் ரவி குடும்பத்துடன் டெல்லி பயணம் appeared first on Dinakaran.

Tags : Governor Ravi ,Delhi ,Chennai ,Tamil Nadu ,Governor ,R. N.N. Ravi ,Ravi ,
× RELATED சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 42...