×

மணிப்பூர் கலவரம்… மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க எடுத்துச் சென்ற மருந்துகள் போதவில்லை: மருத்துவர் ராதிகா முருகேசன் பேட்டி

சென்னை: மணிப்பூரில் மனநலம் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நாங்கள் எடுத்து சென்ற மருந்துகள் போதவில்லை என மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் கூறினார். மணிப்பூர் மாநிலத்தில் இரு பிரிவினருக்கிடையிலான மோதல் மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறையில் இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். இரண்டு பெண்களுக்கு எதிராக நிகழ்ந்த கொடூரச் செயல் உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்க வைத்தது. இதற்கு நாடு தழுவிய அளவில் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மணிப்பூர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனநல சிகிச்சை வழங்குவதற்காக தன்னார்வத்துடன் சென்றவர் மருத்துவர் ராதிகா முருகேசன். சென்னை துரைப்பாக்கத்தை சேர்ந்த இவர் தற்போது அம்மாநில மக்களுக்கு தேவையான மருந்துகளுக்கு நிதி திரட்டி வருகிறார். இது குறித்து அவரிடம் கேட்டபோது அங்குள்ள மக்களுக்கு தூக்கமின்மை காரணமாக மனநல பிரச்சனைகளுக்கு நாங்கள் எடுத்துச் சென்ற மருந்துகள் போதவில்லை என்று கூறினார். இரண்டு இன மக்களும் ஒற்றுமையாக வாழவே விரும்புகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

The post மணிப்பூர் கலவரம்… மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க எடுத்துச் சென்ற மருந்துகள் போதவில்லை: மருத்துவர் ராதிகா முருகேசன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Manipur Riots… ,Doctor ,Radhika Murugesan ,Chennai ,Manipur ,Manipur riots ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...