- VAO இரண்டும்
- வேடசந்தூர்
- சாமிநாதன்
- தோப்புத்தப்பட்டி
- வேடசந்தூர், திண்டிகுல் மாவட்டம்
- பொன்னேரி
- பெரம்பலூர் மாவட்டம்
- தின மலர்
வேடசந்தூர்: திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே தோப்புபட்டியை சேர்ந்தவர் சாமிநாதன் (38). இவர் பெரம்பலூர் மாவட்டம், பொன்னேரி பகுதியில் விஏஓவாக வேலை பார்த்து வந்தார். சாமிநாதன் கடந்த 3 நாட்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊரான தோப்புபட்டிக்கு வந்திருந்தார். நேற்று அதே பகுதியில் உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, மைசூரிலிருந்து தூத்துக்குடி சென்ற தூத்துக்குடி எக்ஸ்பிரஸ், சாமிநாதன் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து திண்டுக்கல் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post ரயில் மோதி விஏஓ பலி appeared first on Dinakaran.
