×

சுங்கச்சாவடி கட்டண வசூல் விதிகள் முறையாக பின்பற்றாமல் தமிழக சுங்கச்சாவடியில் அதிக கட்டணம் வசூல்: சிஏஜி அறிக்கையில் தகவல்

சென்னை: சுங்கச்சாவடி கட்டண வசூல் விதிகள் முறையாக பின்பற்றாமல் அதிக சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது சிஏஜி அறிக்கையில் தெரியவந்துள்ளது. சுங்கச்சாவடி கட்டணம் வசூல் தொடர்பாக திருத்தப்பட்ட விதிகளின்படி நெடுஞ்சாலைகளில் கட்டுமான திட்டப் பணிகள் முடிவடையும் வரை 75 விழுக்காடு சுங்கக்கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும். எனினும் தென் இந்தியாவில் அந்த விதியை கடைபிடிக்காமல் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் 132 கோடியே 5 லட்சம் ரூபாய் அளவுக்கு சுங்க கட்டணம் வசூல் செய்துள்ளது தலைமை கணக்கு தணிக்கையாளரின் ஆய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது.

இதில் 2018 ஆகஸ்ட் முதல் 2021 மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் 6 கோடியே 54 லட்சம் ரூபாய் கூடுதலாக சுங்கக்கட்டணம் வசூல் செய்யப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது. குறிப்பாக தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிக சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் 1956ம் ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட பாலத்தில் சுங்கக்கட்டணம் வசூலிக்கக்கூடாது என்ற விதி இருந்தும் 1954ல் கட்டப்பட்ட மாமண்டூர் பாலாற்று பாலம் அருகே உள்ள பரனூர் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அந்த சுங்கச்சாவடியில் மட்டும் வாகனங்களிடம் இருந்து 28 கோடி ரூபாய் சுங்கக் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்பட்டிருக்கிறது.

The post சுங்கச்சாவடி கட்டண வசூல் விதிகள் முறையாக பின்பற்றாமல் தமிழக சுங்கச்சாவடியில் அதிக கட்டணம் வசூல்: சிஏஜி அறிக்கையில் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu TU ,CAG ,Chennai ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...