![]()
சென்னை: ஜெயலலிதா இருந்தவரையில் எடப்பாடி பழனிசாமியை யாருக்கும் தெரியாது என்று திருச்சி சிவா எம்.பி. கூறியுள்ளார். திமுக மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று அளித்த பேட்டி: மணிப்பூர் மாநிலத்தில் 100 நாட்களுக்கு மேலாக பதற்றம் நிலவுகிறது. 100க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 1 லட்சம் பேர் இடம் பெயர்ந்து பதுங்கி வாழ்கின்றனர். இப்போது ஒரு தகவல் வெளிவந்துள்ளது. மணிப்பூரை சேர்ந்த 230 பேர் மியான்மர் காடுகளில் தவிக்கின்றனர்.
மணிப்பூர் விவகாரத்தில் பிரதமரின் விளக்கம் தேவை என்பதே எதிர்க்கட்சிகளின் ஒருமித்த கோரிக்கையாக இருந்தது. ஆனால் பிரதமர் மோடி 2 நிமிடம் மட்டுமே மணிப்பூர் பற்றி பேசி உள்ளார். ஜெயலலிதா இருந்தவரையில் எடப்பாடி பழனிசாமியை யாருக்கும் தெரியாது. அவர் அப்போலோ மருத்துவமனைக்கு சென்ற பிறகு தான், எடப்பாடி பழனிசாமி வெளியே தெரிகிறார். அவர் ஏதோ பக்கத்தில் இருந்து 1989ல் சட்டமன்றத்தில் பார்த்தது போல கூறுகிறார்.
இன்று எடப்பாடி பழனிசாமி எதிர்கட்சி தலைவர் பதவியில் இருக்கிறார். ஆகையால் அந்தப் பொறுப்போடு பேசட்டும். அப்போது நிர்மாலா சீதாராமன் திருமணம் செய்து கொண்டு லண்டன் சென்று விட்டார். அவர் இந்தியா திரும்பியது 1991ம் ஆண்டு. ஆகையால் அவர் இங்கு நடந்ததை நேரடியாக பார்த்திருப்பதற்கு வாய்ப்பே கிடையாது. ஜெயலலிதாவுடன் அப்போது இருந்த தற்போதைய காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசு இதைப்பற்றி பேசினால் அதில் பொருள் இருக்கிறது. கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்னால் அதில் பொருள் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
The post ஜெயலலிதா இருந்தவரை எடப்பாடி பழனிசாமியை யாருக்கும் தெரியாது: திருச்சி சிவா எம்.பி. பேட்டி appeared first on Dinakaran.
