சென்னை: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகை திருட்டு வழக்கு தொடர்பாக முடக்கபட்ட வங்கிக் கணக்குகளை விடுவிக்கக் கோரி பணிப்பெண் தொடர்ந்த வழக்கில் தேனாம்பேட்டை போலீசார், ஒரு வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா தனது வீட்டில் இருந்த 60 சவரன் தங்க நகைகள் திருடுபோனதாக தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், அந்த வீட்டின் பணிபெண் ஈஸ்வரியை கைது செய்தனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டபட்ட ஈஸ்வரி அவருடைய மகள்கள் பிருந்தா மற்றும் மஞ்சுளா ஆகியோரது வங்கி கணக்குகளையும் முடக்கி தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கியின் மந்தவெளி கிளை மேலாளர் உத்தரவு பிறபித்தார்.
இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என அவர்கள் 3 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனிதனியாக மனுதாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், தங்களுடைய கடின உழைப்பில் சம்பாதித்த பணத்தை சேமித்து வைத்திருக்க கூடிய இந்த வங்கி கணக்கை முடக்கியதால், வாழ்வாதரம் பாதிக்கபட்டுள்ளது.தங்களுக்கு எந்த வாய்ப்பும் வழங்காமல் இயற்கை நீதிக்கு முரணாக இந்த உத்தரவானது பிறபிக்கபட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஸ், இந்த மனுவுக்கு ஒருவாரத்தில் பதிலளிக்க வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
The post ஐஸ்வர்யா ரஜினி வீட்டில் நகை திருட்டு தொடர்பாக பணிப்பெண் தொடர்ந்த வழக்கு: போலீசார் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.
