×

கொடைக்கானல் பேரிஜம் வனப்பகுதியில் யானைகள் முகாம்; சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறை தடை..!!

திண்டுக்கல்: கொடைக்கானல் பேரிஜம் வனப்பகுதியில் யானைக் கூட்டம் முகாமிட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில மாதங்களாகவே யானைகள் நடமாட்டம் மற்றும் யானைகளால் தொந்தரவு தொடர்ந்து இருந்து வருகிறது. கொடைக்கானல் மேல்மலை மற்றும் கீழ்மலை கிராமங்களில் விவசாயிகளை பெரிதும் துன்புறுத்தி வரக்கூடிய யானை கூட்டங்கள் பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கொடைக்கானலில் முக்கிய சுற்றுலாத் தலமாக இருக்கக்கூடிய பேரிஜம் வனப்பகுதியில் யானை கூட்டம் கடந்த 2 நாட்களாக முகாமிட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி பேரிஜம் பகுதிக்கு செல்வதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இந்த தடையால் கொடைக்கானலுக்கு வந்துள்ள சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். யானைகளின் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. சுற்றுலா பயணிகள் செல்லக்கூடிய இடங்களில் யானைகள் முகாமிட்டிருந்தால் நாளையும் அனுமதி மறுக்கப்படும் என்று வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கொடைக்கானல் பேரிஜம் வனப்பகுதியில் யானைகள் முகாம்; சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறை தடை..!! appeared first on Dinakaran.

Tags : Elephant Camp ,Parijam Forest ,Kodaikanal ,Dindigul ,Kodaikanal Parijam forest ,Dindigul District… ,Kodaikanal Elephant Camp ,Dinakaran ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...