×

ஆய்வறிக்கை தகவல் இந்தியாவில் அழிவின் விளிம்பில் 25 பறவை இனங்கள்

கொல்கத்தா: உலகில் மொத்தம் 10,906 பறவை இனங்கள் உள்ளன. இவற்றில் 1,353 பறவை இனங்கள் இந்தியாவில் உள்ளன. இது உலகிலுள்ள மொத்த பறவை இனங்களில் 12.4 சதவீதமாகும். இயற்கையை பாதுகாப்பதற்கான சர்வதேச ஒன்றியத்தின் அறிக்கையில், இந்தியாவில் மட்டும் உள்ள அரிய வகையிலான 78 பறவை இனங்களில் 25 அழிந்து வருவதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய விலங்கியல் ஆய்வக விஞ்ஞானி அமித்வா மஜும்தார் கூறுகையில், ‘’உலகில் வேறெங்கும் இல்லாத வகையில், மேற்கு மலைத் தொடர்ச்சியில் 28, அந்தமான் நிகோபர் தீவுகளில் 25, கிழக்கு இமாலயத்தில் 4, தெற்கு டெக்கான் பீடபூமி மற்றும் மத்திய இந்திய வனப்பகுதியில் தலா ஒன்று உள்பட 78 அரிய வகை பறவை இனங்கள் உள்ளன,’’ என்று தெரிவித்தார்.

The post ஆய்வறிக்கை தகவல் இந்தியாவில் அழிவின் விளிம்பில் 25 பறவை இனங்கள் appeared first on Dinakaran.

Tags : India ,Kolkata ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...