×

பொது சிவில் சட்டத்திற்கு கேரள மாநில சட்டப்பேரவையில் தீர்மானம்

டெல்லி: பொது சிவில் சட்டத்திற்கு கேரள மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயன் தீர்மானம் கொண்டுவந்த நிலையில் அதன்மீது விவாதம் நடைபெற்று வருகிறது. கேரள சட்டப்பேரவை கூட்டத்தை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேரில் பார்வையிட்டு வருகிறார்.

இந்துக்கள், கிருஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள் என அனைவருக்கும் அவர்தம் மதவழக்கத்தின் படி உள்ள வழிமுறைகளை பின்பற்ற இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி உரிமை உண்டு. அதனை கலைத்து ஒரே மாதிரியான பொது சிவில் சட்டத்தை கொண்டு வர ஒன்றிய அரசு முயன்று வருகிறது.

இந்த பொதுசிவில் சட்டம் குறித்து மக்களின் கருத்து கேட்பு நடைபெற்று வருகிறது. இந்த பொது சிவில் சட்டமானது, சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதிக்கும் வண்ணம் இருக்கிறது என கடுமையான எதிர்ப்புகளை பல்வேறு எதிர்க்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் இன்று கேரள சட்டமன்றத்தில் பொதுசிவில் சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை விதி எண் 118இன் கீழ் தாக்கல் செய்தார். பொது சிவில் சட்டத்தை ஒன்றிய அரசு அமல்படுத்த கூடாது என இந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

The post பொது சிவில் சட்டத்திற்கு கேரள மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் appeared first on Dinakaran.

Tags : Kerala State Legislative Assembly for General Civil Code ,Delhi ,Kerala State Legislative Assembly ,Civil Code ,Kerala ,Chief Minister ,Pinarayi Vijayan ,Dinakaran ,
× RELATED ‘ரயில் ஒன்’ செயலி மூலம்...