![]()
*7 பேர் படுகாயம்
வேப்பூர் : வேப்பூர் அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் டிரைவர் உள்பட 2 பேர் பலியானார்கள். கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல்(39), இவரது மனைவி சாரதா (30), மகன் சாய் தர்ஷன் (9), மகள் ஆத்விகா (6) ஆகியோருடன் திருப்பூரில் தங்கி தனியார் ஆம்பூலன்ஸ் ஓட்டுநராக பணி புரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் தனது சொந்த ஊரான குறிஞ்சிப்பாடிக்கு வந்தவர் மீண்டும் திருப்பூர் செல்ல நேற்று முன்தினம் இரவு காரில் சென்றார்.
காரை தங்கவேலு ஓட்டினார். விருத்தாசலம்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வேப்பூர் அடுத்த ஏ.சித்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி அருகே இரவு 8.30 மணி அளவில் கார் சென்ற போது எதிரே வந்த மற்றொரு கார் எதிர்பாராத விதமாக நேருக்கு நேராக மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் நசுங்கி இடிபாட்டுக்குள் சிக்கிய தங்கவேலு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் காயமடைந்த அவரது மனைவி மற்றும் இரண்டு மகன்கள் சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மற்றொரு காரில் பயணித்த 5 பேர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் பெரம்பலூரைச் சேர்ந்த அண்ணாமலை (70) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து நடந்த பகுதிக்கு கடலூர் எஸ்பி ராஜாராமன், திட்டக்குடி டிஎஸ்பி காவியா ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திண்டிவனம் விபத்தில் 2 வாலிபர்கள் பலி
திண்டிவனம் அருகே பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு வாலிபர்கள் உயிரிழந்தனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கோவிந்தசாமி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகே நேற்று முன்தினம் இரவு இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் வைரபுரம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த நாராயணன் மகன் செந்தூரப்பாண்டியன் (27) மற்றும் மற்றொரு வாகனத்தில் எதிரே வந்த நெய்குப்பி கிராமத்தைச் சேர்ந்த குமார் மகன் வசந்த் (21) ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.
ரோசணை போலீசார் இருவரையும் மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவரும் உயிரிழந்தனர். விபத்தில் பலியான இருவரும் கூலி தொழிலாளிகள் என தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
The post வேப்பூர் அருகே பரிதாபம் கார்கள் நேருக்கு நேர் மோதல் டிரைவர், முதியவர் பரிதாப பலி appeared first on Dinakaran.
