- காங்கிரஸ் ஆம் ஆத்மி கட்சி கூட்டணி
- குஜராத்
- மக்களவைத் தேர்தல்
- அகமதாபாத்
- ஆம் ஆத்மி கட்சி
- காங்கிரஸ்
- தின மலர்
அகமதாபாத்: மக்களவை தேர்தலில் குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியும், ஆம் ஆத்மியும் இணைந்து போட்டியிடும் என்று ஆம் ஆத்மியின் குஜராத் தலைவர் இசுதான் காத்வி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பேசிய ஆம் ஆத்மியின் குஜராத் தலைவர் இசுதான் காத்வி செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘ஆம் ஆத்மி-காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் இந்திய கூட்டணியில் உள்ளன. இந்த தேர்தல் கூட்டணி குஜராத்திலும் செயல்படுத்தப்படுத்தப்படும். கூட்டணி குறித்த பேச்சுக்கள் ஆரம்ப நிலையில் இருந்தாலும், வரும் மக்களவை தேர்தலில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடும் என்பது உறுதியாகும். குஜராத்தில் மக்களவை தேர்தலில் தொகுதி பங்கீடு முறைப்படி நடைபெறும். அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால் குஜராத்தில் 26 தொகுதிகளிலும் பாஜவால் வெற்றி பெற முடியாது. மக்களவை தேர்தலில் பாஜவை தோற்கடிப்பதற்காக இந்திய அணியில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி இணைந்துள்ளது” என்றார். குஜராத் ஆம் ஆத்மி தலைவரின் இந்த திடீர் அறிவிப்பு குறித்து காங்கிரஸ் கூறுகையில், ‘‘இறுதி முடிவை கட்சித் தலைமை எடுக்கும்” என்றார்.
The post மக்களவை தேர்தலில் குஜராத்தில் காங்கிரஸ் ஆம் ஆத்மி கூட்டணி appeared first on Dinakaran.
