×

பஸ் மோதி கட்டிட தொழிலாளி பலி

 

சாத்தூர், ஆக.7: சாத்தூர் அருகே அமீர்பாளையம் 2வது இறக்கத்தை சேர்ந்தவர் ஜெயராஜ்(35). கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மஞ்சுளா மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். தனியார் மருத்துவமனையில் பணி செய்யும் மனைவியை அழைத்து செல்ல இருசக்கர வாகனத்தில் நேற்று மதியம் வெம்பக்கோட்டை சாலையில் ஜெயராஜ் சென்றார். அப்போது இருசக்கர வாகனத்தில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பேருந்து அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ஜெயராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார்.

The post பஸ் மோதி கட்டிட தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Tags : Chatur ,Jayaraj ,Ameerpalayam 2nd Floor ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை