×

7வது ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டி எல்ஈடி திரையில் நேரடி ஒளிபரப்பு: நாசர் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

ஆவடி: ஆவடி பேருந்து நிலையத்தில் 7வது ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டியின் நேரலை ஒளிபரப்பை சட்ட மன்ற உறுப்பினர் நாசர் துவக்கி வைத்தார். மாமல்லபுரத்தில், 16 ஆண்டுகளுக்கு பின், சென்னையில் 7வது ஆசிய சாம்பியன்ஸ் ஆண்கள் ஹாக்கி கோப்பை சென்னை- 2023 போட்டிகள் நேற்று துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில், ஹாக்கி கோப்பை போட்டி ஆவடி பேருந்து நிலையத்தில் நேரலையில் எல்ஈடி திரையில் ஒளிப்பரப்ப ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனை ஆவடி சட்ட மன்ற உறுப்பினர் சா.மு.நாசர் கலந்து கொண்டு நேரடி ஒளிபரப்பை துவக்கி வைத்து போட்டியை கண்டு களித்தார். இதற்கு முன்னதாக ஆவடி பேருந்து நிலையத்திற்கு வருகை தந்த சட்ட மன்ற உறுப்பினரை அப்பகுதி ஹாக்கி வீரர்கள் உற்சாகமாக வரவேற்றனர். இந்நிகழ்வில் ஆவடி மேயர் ஜி.உதயகுமார், மாநகர பொறுப்பாளர் சன் பிரகாஷ், பகுதி செயலாளர்கள் நாராயண பிரசாத், ராஜேந்திரன், பொன் விஜயன், உள்ளிடோர் கலந்து கொண்டனர்.

The post 7வது ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டி எல்ஈடி திரையில் நேரடி ஒளிபரப்பு: நாசர் எம்எல்ஏ தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : 7th Asian Champions Hockey Tournament ,Nasser ,MLA ,Aavadi ,Aavadi Bus Stand ,Dinakaran ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...