×

திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக மாணவர் அணிக்கான விண்ணப்ப படிவம்: நாசர் எம்எல்ஏ வழங்கினார்

ஆவடி: ஆவடியில் உள்ள திமுக மத்திய மாவட்ட கட்சி அலுவலகத்தில், திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக சார்பு ஒன்றிய, நகர, பகுதி மற்றும் பேரூர் திமுக மாணவர் அணி அமைப்பாளர் – துணை அமைப்பு பொறுப்புகளுக்கான விண்ணப்ப படிவங்களை ஆவடி சா.மு.நாசர் எம்எல்ஏ வழங்கினர்.முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, திருவள்ளூர் மத்திய மாவட்டத்திற்குட்பட்ட ஒன்றிய, நகர, பகுதி பேரூர் கழக மாணவர் அணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் பொறுப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதன் அடிப்படையில், திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக மாணவர் அணிக்கான ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் திமுக அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் பொறுப்புகளுக்கு விண்ணப்பங்கள் மாவட்டக் செயலாளர் ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சா.மு.நாசர் நேற்று முன்தினம் வழங்கினார்.

இந்த பொறுப்புகளுக்கு விருப்பம் உள்ளவர்களுக்கு ஆவடி திருமலைராஜபுரம், ரயில் நிலைய அருகில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் காலை 9 முதல் மதியம் 1 மணி வரை மாநில மாணவரணி செயலாளர் எழிலரசன் தலைமையில் மாநில மாணவரணி இணைச் செயலாளர் ஜெரால்டு முன்னிலையில் விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டது. படிவங்களை பூர்த்தி செய்து அதனை ஆகஸ்ட் 10 தேதி மதியம் 1 மணிக்குள் மாவட்டக் திமுக அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது. இதில், தலைமை செயற்குழு உறுப்பினர் ரமேஷ், ஆவடி மாநகர மேயர் உதயக்குமார், ஆவடி மாநகர பொறுப்பாளர் சன் பிரகாஷ், மாவட்ட நிர்வாகிகள் இராஜி, சீனிவாசன், ஜெயபாலன், காயத்திரி ஸ்ரீதர், நரேஷ் குமார், பகுதி செயலாளர்கள் பேபி சேகர், ராஜேந்திரன் மற்றும் மாநகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக மாணவர் அணிக்கான விண்ணப்ப படிவம்: நாசர் எம்எல்ஏ வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Tiruvallur Central District DMK Student Team ,Nasser ,MLA ,Avadi ,DMK ,district ,Avadi, ,Thiruvallur central district ,Thiruvallur central district DMK ,Dinakaran ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...