×

சென்னை கொளத்தூரில் டீ கடையில் கவர்ச்சிகர சலுகை: ஒரு டீ வாங்கினால் ஒரு கிலோ தக்காளி இலவசம்

சென்னை: சென்னை கொளத்தூரில் புதிதாக திறக்கப்பட்டுள்ள டீ கடை சார்பில் ஒரு டீ வாங்கினால் ஒரு கிலோ தக்காளி இலவசமாக வழங்கப்படும் என அறிவித்தநிலையில் டீ வாங்க பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். சென்னை கொளத்தூர் கணபதிராவ் நகரில் வீ சாய்ஸ் டீ கடை சார்பில் ஒரு டீ வாங்கினால் ஒரு கிலோ தக்காளி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. ஒரு டீ ரூ.12க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதனை ஒட்டி பொதுமக்களுக்கு இன்று, நாளை மற்றும் மறுநாள் ஆகிய மூன்று நாட்களுக்கும் மாலை 4 மணி முதல் ஆறு மணி வரை முதலில் வரும் 100 பேருக்கு ஒரு டீ வாங்கினால் ஒரு கிலோ தக்காளி இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில் 100 பேருக்கு வழங்கப்பட்டு வருகிறது. மொத்தமாக மூன்று நாட்களுக்கும் சேர்த்து 300 கிலோ தக்காளி இலவசமாக வழங்கப்படுவதாக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது தக்காளி விலை கடந்த மாதங்களில் ரூ.150 க்கு அதிகரித்து காணப்படுகிறது. பொதுமக்கள் குறைந்த அளவே தக்காளி வாங்கி வரக்கூடிய நிலையில் பொதுமக்களுக்கு உதவும் வகையில் தக்காளி வழங்குவதாக நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்ட்டுள்ளது. பொதுமக்களும் தக்காளியை வாங்குவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்து ஒரு டீயை வாங்கி தக்காளி வாங்கி வருகின்றனர்.

The post சென்னை கொளத்தூரில் டீ கடையில் கவர்ச்சிகர சலுகை: ஒரு டீ வாங்கினால் ஒரு கிலோ தக்காளி இலவசம் appeared first on Dinakaran.

Tags : Kolathur, Chennai ,Chennai ,Kolathur ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...