![]()
பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு ஒன்றியம் அத்திமாஞ்சேரி ஊராட்சிக்கு சொந்தமான பகுதியில் கொடிவலசா ஊராட்சி மன்ற நிர்வாகம் சார்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆழ்துளை கிணறு அமைத்து பைப் லைன்கள் மூலம் மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அத்திமாஞ்சேரி ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் அனுமதியின்றி ஆழ்துளை கிணறு அமைத்து அதிக அளவில் தண்ணீர் பயன்படுத்துவதால், தங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்.
மேலும் கொடிவலசா ஊராட்சியில் வீடுகள் மற்றும் சாயபட்டறைகளிலிருந்து வெளியேற்றப்படும் நீர்வரத்து கால்வாயில் கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் பள்ளிப்பட்டு சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து வட்டாட்சியர் விஜயகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் அருள் ஆகியோர் அத்திமாஞ்சேரி ஊராட்சி மன்ற தலைவர் ஜான்சி ஜெயபிரகாஷ் மற்றும் கிராமமக்கள் கோரிக்கை ஏற்று கொடிவலசா ஊராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றிலிருந்து அத்திமாஞ்சேரி ஊராட்சி மக்கள் குடிநீர் பயன்படுத்த அனுமதிக்கவும், ஏரி நிர்வரத்து கால்வாயில் கழிவுநீர் கலப்பது தடுத்து நிறுத்தப்படும் என்று உறுதிஅளித்ததின் பேரில் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
The post பள்ளிப்பட்டு அருகே அனுமதியின்றி ஆழ்துளை கிணறு: கிராம மக்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.
